×

மே 7 முதல் உதகையில் இ-பாஸ் நடைமுறை அமல்

நீலகிரி: மே 7 முதல் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட மக்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். இ-பாஸ் கேட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும்; எந்தவித கட்டுப்பாடும் கிடையாது. நீலகிரி வரும் அனைத்து தனியார் வாகனங்களும் இ-பாஸ் பெறுவது கட்டாயம். அரசு பேருந்தில் வருபவர்கள் இ-பாஸ் பெற தேவையில்லை. ஒரு வாகனத்துக்கு ஒரு இ-பாஸ் போதும். இ-பாஸ் நடைமுறை மே 7 முதல் மே 30 வரை சோதனை முறையில் அமல்படுத்தப்படும். உள்நாட்டு மக்கள் செல்போன் எண்ணை பதிவு செய்து இ-பாஸ் பெறலாம் என்றும் கூறினார்.

The post மே 7 முதல் உதகையில் இ-பாஸ் நடைமுறை அமல் appeared first on Dinakaran.

Tags : NEILGIRI ,GOVERNOR ,ARUNA ,
× RELATED கொடைக்கானலுக்குச் செல்ல உள்ளூர்...